Homeசெய்திகள்சினிமாஇன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!

இன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!

-

இன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!

கூலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 12) அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் கூலி படத்தில் இருந்து முக்கிய அப்டேட் வெளியாக இருக்கிறது.

இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தன்

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!இந்த படத்தின் முதல் பாடல் நாளை (டிசம்பர் 13) மாலை வெளியாகும் எனவும் இதனை நடிகர் துல்கர் சல்மான் வெளியிடப்போகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவனின் புதிய ப்ராஜெக்ட்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது செல்வராகவன் இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் நாளை (டிசம்பர் 13) மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!இந்த படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்

விஜய் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் விஜய். இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) கோவாவில் நடைபெறும் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார் விஜய். இன்றைய அசத்தலான அப்டேட்டுகள்!இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பைரவா சர்க்கார் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ