Homeசெய்திகள்சினிமாகண்ணை நம்பாதே பட பாடல் வெளியீடு

கண்ணை நம்பாதே பட பாடல் வெளியீடு

-

- Advertisement -

கண்ணை நம்பாதே பட பாடல் வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தைத் தொடந்து, இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் கண்ணை நம்பாதே. கிரைம் திரில்லர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து இருக்கிறார். மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், சதீஷ், பூமிகா, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். கண்ணை நம்பாதே படத்தின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி, கண்ணை நம்பாதே திரைப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. புதிய போஸ்டர் ஒன்றயைும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கண்ணை நம்பாதே படத்திலிருந்து முதல் பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ