Homeசெய்திகள்சினிமாகுற்றச்சாட்டுகளுக்கு பதிலடி.... நடிகர் ஸ்ரீயின் வியக்க வைக்கும் வீடியோ!

குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி…. நடிகர் ஸ்ரீயின் வியக்க வைக்கும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் ஸ்ரீ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி.... நடிகர் ஸ்ரீயின் வியக்க வைக்கும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கியவர் நடிகர் ஸ்ரீ. அதைத்தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயரையும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எனவே வளர்ந்து வரும் நடிகரான ஸ்ரீ அடுத்தடுத்த நல்ல படங்களில் நடித்து திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார். குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி.... நடிகர் ஸ்ரீயின் வியக்க வைக்கும் வீடியோ!அதிலும் மெலிந்த தோற்றத்தில் பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஸ்ரீயை கண்டு பலரும் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!.. அவருக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். இது ஒரு பக்கம் இருக்க, ஸ்ரீயின் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் யாருடனும் பேசாமல் தனியாக வசித்து வருகிறார் என்றும் கூறினர். அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலர், நடிகர் ஸ்ரீயை தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் எனவும் கூறி வந்தனர். அடுத்தது நடிகர் ஸ்ரீ, போதை பழக்கத்தாலும் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்கலாம் என்றும் பல தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஸ்ரீ வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் புகைப்பழக்கத்தை கைவிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் 4 மாதங்கள் பதினாறு நாட்கள் ஆகிவிட்டது. ஆரோக்கியம் இல்லாத பழக்கங்களை கைவிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். மேலும் புகைப் பழக்கத்தை கைவிட முதல் 90 நாட்களுக்கு சர்க்கரை கலந்த கருப்பு காபி குடிக்கலாம் என்றும் மக்களும் புகைப் பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் ஸ்ரீ வெளியிட்ட இந்த வீடியோ குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பது போல் மட்டுமல்லாமல் பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

MUST READ