நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (டிசம்பர் 13) கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது அரசியல் காரணங்களாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. மறுபக்கம் திரை பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கூட்ட நெரிசலில் பெண் பலியானதற்கு நேரடியாக அல்லு அர்ஜுன் எப்படி காரணமாக முடியும்? என்று ரசிகர்களும் அல்லு அர்ஜுனுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்நிலையில் தான் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் ரிமாண்டில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு சிறையில் வைத்த சில மணி நேரங்களிலேயே அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
#AlluArjun‘s Emotional Reunion with Family..✌️
— Laxmi Kanth (@iammoviebuff007) December 14, 2024
எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்த போது, “ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன். கூட்ட நெரிசலில் இறந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பத்திற்கு எப்போதும் துணையாக இருப்பேன். இது போன்ற சம்பவம் என் வாழ்வில் இதுவரை நடந்ததில்லை” என்று கையெடுத்து கும்பிட்டவாறு பேசினார்.
மேலும் தனது மனைவி, குழந்தைகளை கட்டி அணைத்து தனது எமோஷனலை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.