Homeசெய்திகள்சினிமாதளபதி விஜய்... தல அஜித்... சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்... கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!

தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!

-

தற்போது தமிழகத்தில் பெரும் பிரச்சனை என்னவென்றால் யார் சூப்பர் ஸ்டார் என்பது தான். நடிகர்கள் தொடங்கி வீட்டுக்கு பால் பாக்கெட் போடுபவர் முதற்கொண்டு எல்லாரிடமும் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுப்பி விட்டனர்.

 

அதற்கு பலரும் ரஜினி தானே எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று கூறுகின்றனர். ஒரு சிலர் சூப்பர் ஸ்டார் என்பது ஒரு இடம் தானே தவிர அந்த பட்டத்திற்கான ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜிடம் சூப்பர் ஸ்டார் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “புகழ் மற்றும் சம்பளத்தில் யார் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்களோ அவர் தான் சூப்பர் ஸ்டார். அப்படி பார்த்தால் கடந்த 45 வருடங்களாக ரஜினி சார் மட்டுமே நமது மனதில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். நாம் அதை மாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார்.

எம்ஜிஆர் மக்கள் திலமாக இருந்தார். ரஜினியை மக்கள் திலகம் என்று சொன்னால் அது ஒரு மாதிரி இருக்கும். அதே மாதிரி தான் எப்போதும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார். ‘தளபதி விஜய்.. தல அஜித்.. அப்படித்தான் வச்சிக்கணும்.. சூப்பர் ஸ்டார்ன்னா ரஜினி சார் தான்” என்று பேசியுள்ளார்.

MUST READ