Homeசெய்திகள்சினிமாநடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்.... விளக்கம் அளித்த மருத்துவர்!

நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்…. விளக்கம் அளித்த மருத்துவர்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்.... விளக்கம் அளித்த மருத்துவர்!அதைத் தொடர்ந்து இவர், மார்க் ஆண்டனி 2, துப்பறிவாளன் 2, இரும்புத்திரை 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மதகஜராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்தப் படத்தை சுந்தர். சி இயக்கியிருக்கும் நிலையில் இதில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (ஜனவரி 5) சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் விஷாலுக்கு கை நடுங்கிய நிலையில் குரலில் தடுமாற்றத்துடன் பேசினார். அதன் பின்னர் அந்நிகழ்வின் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வந்தனர். எப்படி இருந்த விஷால் இப்படி ஆகிவிட்டாரே என்று அவருடைய நிலைமையை பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வந்தனர். நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்.... விளக்கம் அளித்த மருத்துவர்!இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் காய்ச்சல் இருக்கும்போது எதற்காக நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் தான் நடிகர் விஷால், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு முற்றிலுமாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் விஷாலுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

MUST READ