நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சத்யராஜ் இணைந்துள்ளார்.
நயன்தாரா தற்போது ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என்று தற்காலிகமாக தலைப்பு வைத்தனர்.
இப்படத்தில் ஜெய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். ராஜா ராணிக்குப் பிறகு நயன்தாரா மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும் ஜோடி சேருகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லீ இருவரும் இணைந்துள்ளனர். ரேணுகா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
Blessed to have the versatile Sathyaraj sir in #LadySuperstar75!#Nayanthara #N75 @Nilesh_Krishnaa @sathyaDP @MusicThaman @Gdurairaj10 @ZeeStudios_ @tridentartsoffl @NaadSstudios #Ravindran @Naadsstudios @SETHIJATIN @sanjayragh pic.twitter.com/GEHK269DaN
— Nilesh Krishnaa (@Nilesh_Krishnaa) April 8, 2023
‘ராஜா ராணி’ படத்தில் சத்யராஜ் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் மிகவும் ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது அவரும் இந்தப் படத்தில் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.