Homeசெய்திகள்சினிமாநான் சினிமாவில் நடிக்க அவர்தான் காரணம்..... மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

நான் சினிமாவில் நடிக்க அவர்தான் காரணம்….. மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

-

நடிகை சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.நான் சினிமாவில் நடிக்க அவர்தான் காரணம்..... மனம் திறந்த சிவகார்த்திகேயன்! அதைத் தொடர்ந்து இவர் தனுஷின் 3 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மெரினா, எதிர்நீச்சல் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ரெமோ போன்ற பல படங்கள் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தற்போது இவர் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். மேலும் இவர் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். வரும் சினிமாவில் பன்முகத் துறைகளில் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நான் சினிமாவில் நடிக்க அவர்தான் காரணம்..... மனம் திறந்த சிவகார்த்திகேயன்!இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், “கொட்டுக்காளி போன்ற நல்ல படங்களை தயாரிப்பது மனதிருப்தியை தருகிறது. நான் என்றைக்கோ சினிமாவை விட்டுப் போயிருக்க வேண்டியது. ஆனால் நான் சினிமாவில் நடிக்க என் மனைவி ஆர்த்தி தான் காரணம்” என்று பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா, குகன், பவன் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ