நடிகை ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் வெளியாகி வரும் சீரியல்கள் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். அந்த சீரியலில் நடிகை ரித்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரித்திகாவின் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில் நடிக்கும் ‘அண்ணா‘ என்ற சீரியலில் அவருக்கு தங்கையாக நடிக்க ரித்திகா ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதனால் அவர் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரித்திகாவுக்கு பதிலாக பொன்னி சீரியலில் கதாநாகி பாக்கியலட்சுமி சீரியலில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.