நடிகர் தனுஷ் தற்போது குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு இன்று (நவம்பர் 21) திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த சில தினங்களாக தனுஷ் – நயன்தாரா இருவருக்குமான மோதல்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட காட்சிகளை இணைக்க படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி வழங்காத காரணத்தால் நடிகை நயன்தாரா, தனுஷை தாக்கி அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தார்.
#Dhanush and #Nayanthara attended the same function today
– Producer #AakashBaskaran “#IdlyKadai & #SK25” wedding
pic.twitter.com/naJrFHhA6V— Movie Tamil (@MovieTamil4) November 21, 2024
அதில் நடிகர் தனுஷ், 3 வினாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாகவும் தனுஷின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் தானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். நயன்தாரா வெளியிட்டிருந்த அந்த அறிக்கைக்கு மலையாள நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். சூழல் இப்படி இருக்க தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஆகாஷ் பாஸ்காரனின் திருமண விழாவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.