பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படம் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் சூர்யா நடிப்பில் தான் வணங்கான் திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். எனவே தற்போது அருண் விஜயை வைத்து பாலா சைலண்டாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய வரலாற்று கதை கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.