ராட்சசன் படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். அந்த வகையில் இவர் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் ஓர் மாம்பழ சீசனில், ஆர்யன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
அதாவது ஏற்கனவே ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர்களது காம்போவில் வெளியான ராட்சசன் திரைப்படம் இன்றுவரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. தற்போது இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.