நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தான் இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய 69ஆவது திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்திருந்தார் விஜய். விஜய் அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் மற்றொரு பக்கம் அவர் சினிமாவை விட்டு வெளியேறுவது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் பிரபல இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால் அவருடைய வீட்டு வாசலில் ஸ்க்ரிப்ட்டுடன் நிற்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்.
#Ashwath in recent interview
– I like Vijay sir so much.
– The film that I want to do with #Vijay sir is a proper love action film.#JanaNayagan #ThalapathyVijaypic.twitter.com/tD3meYDypy— Movie Tamil (@MovieTamil4) March 13, 2025
அதைத்தொடர்ந்து மற்றுமொரு பேட்டியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, “விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை வைத்து காதல் கலந்த ஆக்சன் படத்தை எடுக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் அசோக் மாரிமுத்து ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கி முக்கியமான இயக்குனராக மாறிவிட்டார். இதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.