மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர இவர் ஏற்கனவே உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இவர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் விஜயின் பீஸ்ட், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் இவர் தற்போது பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார்.
அதாவது சூத்ரவாக்கியம் என்ற படத்தில் ஷைன் டாம் சாக்கோவுடன் இணைந்து நடித்த நடிகை வின்சி, ஷைன் டாம் சாக்கோ படப்பிடிப்பின் போது போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அந்த நடிகை, தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசிய வீடியோ வைரலாகி வந்தது. அதே சமயம் ஷைன் டாம் சாக்கோ கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அந்த ஓட்டலில் நேற்று இரவு போதை பொருள் ரெய்டு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Video of actor Shine Tom Chacko fleeing from hotel during a drugs raid.@MSKiranPrakash @PaulCithara @pendown #ShineTomChacko #DrugsRaid #Kochi #Kerala pic.twitter.com/x4UQQ0aiA1
— TNIE Kerala (@xpresskerala) April 17, 2025
அந்த சமயத்தில் இரவு 11 மணி அளவில் ஷைன் டாம் சாக்கோ தனது அறையிலிருந்து ஓட்டம் பிடித்து தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலீசார் அவரை கையும் களவுமாக பிடிக்கும் சமயத்தில் அவர் எஸ்கேப் ஆகிவிட்டாராம். மேலும் போலீசார் அவரை மிகத் தீவிரமாக தேடி வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.