குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் அஜித். இவரது 63 வது படமாக தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தம் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. தற்போது வரை அந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் இப்படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் குட் பேட் அக்லி டீசரின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அத்துடன் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி இந்த படத்தின் OG சம்பவம் எனும் முதல் பாடல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.