Homeசெய்திகள்சினிமாகூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு - அல்லு அர்ஜுன்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு – அல்லு அர்ஜுன்

-

- Advertisement -

புஷ்பா திரைப்படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் இறந்த குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு அறிவித்த நடிகர் அல்லு அர்ஜுன்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு - அல்லு அர்ஜுன்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புஷ்பா ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் சந்தியா திரையரங்கிற்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  குடும்பத்துடன் வந்த ரேவதி உயிரிழந்தார் அவரது மகன் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த 20 ஆண்டுகளாக எனது படம் வெளியாகும்போது தியேட்டருக்கு திடிரென சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம். அவ்வாறு புஷ்பா படம் வெளியானதால் ஆர்.டி.சி. எக்ஸ் ரோட்டில் சந்தியா தியேட்டருக்கு சென்றேன். ஆனால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் இறந்த சம்பவம் நினைத்துப் பார்க்க முடியாதது.

இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் ரேவதி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த வலியில் அவர்கள் தனியாக இல்லை என்பதும் நான் எப்போதும் அவர்கள் தேவைக்கு உடன் இருப்பேன் என்பதை உறுதியளிக்க விரும்புகிறேன்.   இந்த சவாலான பயணத்தில் அவர்களுக்கு உதவுவதற்கு சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக ₹ 25 லட்சம் ரேவதி குடும்பத்தினருக்கு வழங்குவதோடு  மருத்துவ செலவு மொத்தமாக நான் ஏற்பேன். என் நடிப்பு சினிமா எடுப்பது எல்லாம் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே. எனவே  ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து  பாதுகாப்பாக  வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.

ஜெய்ப்பூருக்கு சென்ற ‘கூலி’ படக்குழு…. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அமீர்கான்!

MUST READ