நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதன்படி கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. மேலும் நடிகர் விஷால், துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தான் நடிகர் விஷால், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் (புறநானூறு) SK 25 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என கடந்த சில தினங்களாக சமூக வலை தினங்களையும் பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் விஷால், “வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேனா? நிச்சயமாக இல்லை. நான் என்னுடைய லைன் அப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் இந்த தகவல் எங்கிருந்து வந்தது எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை 20 வருட கடின உழைப்பிற்கு பிறகு என்னை வில்லனாக பார்ப்பதுதான் அவர்களின் விருப்பம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதற்கு தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.