லால் சலாம் படத்திலிருந்து தேர் திருவிழா எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
'THER THIRUVIZHA' from Lal Salaam is here to kickstart the festive vibes! ☀️🌾✨ Let the rural beats ignite the celebration! 🥁🔥✨#TherThiruvizhaOUTNOW ▶️ https://t.co/4BN3YUHM3v
An @arrahman musical 🎶
Singers 🎤 @Shankar_Live @RaihanahShekar @deepthisings @iamyogi_se… pic.twitter.com/CRNArPqh8s— Lyca Productions (@LycaProductions) December 18, 2023