Homeசெய்திகள்சினிமாஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்.... இதுதான் ரிலீஸ் தேதியா?

ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்…. இதுதான் ரிலீஸ் தேதியா?

-

- Advertisement -

கடந்த 2022-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்.... இதுதான் ரிலீஸ் தேதியா? அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இந்த படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ஒரு சில காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து இப்படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் ஜூன் 13 அன்று வெளியாகும் என சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகின்றன.ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்.... இதுதான் ரிலீஸ் தேதியா?

இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898AD திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இந்த படம் ஏற்கனவே மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த படம் ஜூன் 27 இல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து கமல்ஹாசன் திரைப்படங்கள் ஒரே மாதத்தில் மோத இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரண்டு படங்களையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ