Homeசெய்திகள்சினிமாமற்ற மலையாள படங்களை தூக்கி சாப்பிட்ட '2018'... தொடர் வசூல் வேட்டை!

மற்ற மலையாள படங்களை தூக்கி சாப்பிட்ட ‘2018’… தொடர் வசூல் வேட்டை!

-

மலையாள திரை உலகில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ திரைப்படம் அதிவேகமாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அதனை டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற படம் முறியடித்துவிட்டது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய ‘2018‘ என்ற திரைப்படம் கடந்த மே5-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ், அபூர்ணா பாலமுரளி, குஞ்சோகா போபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் தற்போது 12 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

கேரளாவில் மட்டுமே 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இத்திரைப்படம்
இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முன்னணி நடிகர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நடிகர்கள் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடைய மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

கேரளா சினிமாவில் 100 கோடி வசூல் என்பது இன்றளவும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. த்ரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்கள் 50 கோடி வசூல் செய்த நிலையில் கடந்த 2019-ல் பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மோகன்லாலின் லூசிபர் திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது.

தற்போது திரைக்கு வந்த 12 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 2018 திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

MUST READ