SIIMA எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்படம் விருது வழங்கும் விழா துபாயில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒவ்வொரு மொழிகளிலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன், மாவீரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த ஹீரோக்கான SIIMA விருதை வென்றுள்ளார்.
சிறந்த இயக்குனருக்கான SIIMA விருது ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் என்பதற்கான விருதை நடிகர் எஸ் ஜே சூர்யா வென்றுள்ளார்.
மேலும் லியோ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தசரா திரைப்படத்தில் நடித்ததற்காக தெலுங்கு நடிகர் நானி, சிறந்த நடிகருக்கான SIIMA விருதை வென்றுள்ளார். மேலும் தசரா படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது ஸ்ரீகாந்த் ஒடேலாவிற்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது கீர்த்தி சுரேஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் ஹாய் நான்னா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான SIIMA விருதை மிர்ணாள் தாகூர் பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து சிறந்த இசையமைப்பாளராக ஹேஷம் அப்துல் வாகப் ஹாய் நான்னா மற்றும் குஷி ஆகிய படங்களுக்காக படத்தினை வென்றுள்ளார்.
சிறந்த அறிமுக நடிகருக்காக சங்கீத் ஷோபன் விருதினை பெற்றுள்ளார். சிறந்த அறிமுக இயக்குனராக சௌரவ், ஹாய் நான்னா படத்தை இயக்கியதற்காக விருது பெற்றுள்ளார். இது போன்ற சிறந்த அறிமுக தயாரிப்பாளர், அறிமுக நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர் என கன்னடம் போன்ற பல மொழிகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.