Homeசெய்திகள்சினிமா2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் லிஸ்ட்!

2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் லிஸ்ட்!

-

- Advertisement -

திரைத்துறையில் தலைசிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. திரைக் கலைஞர்களும் ஆஸ்கர் விருதினை அடைவதை தங்களின் லட்சியமாகக் கொண்டு கடினமாக உழைத்து வருகின்றனர். 2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் லிஸ்ட்!அந்த வகையில் அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இந்நிலையில் 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சர்வதேச திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் லிஸ்ட்!

அதில் சிறந்த நடிகருக்கான விருதை THE BRUTALIST படத்திற்காக அட்ரியன் ப்ரோட்ய் வென்றுள்ளார். அதே படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கானா விருது
டேனியல் ப்ளூம்பர்க்-கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது அனோரா படத்திற்காக மில்கி மேடிசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது சிறந்த துணை நடிகர் – கீரான் கல்கின் A REAL PAIN MOVIE, சிறந்த துணை நடிகை – ஜோ சாலடானா (EMILIA PEREZ MOVIE) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.2025 ஆஸ்கர் விருது வென்றவர்களின் லிஸ்ட்!FLOW திரைப்படம் சிறந்த அனிமேஷன் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அனோரா படத்திற்காக சீன் பேக்கர் சிறந்த இயக்குனராகவும், சிறந்த திரைக்கதைக்காகவும் விருதுகளை வென்றுள்ளார். மேலும் அனோரா திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு காண விருதையும் வென்றுள்ளது.

மேலும் Dune Part 2 – சிறந்த கிராபிக்ஸ்,
No other land – சிறந்த ஆவண திரைப்படம்,

I’m still here – சிறந்த சர்வதேச திரைப்படம் என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

MUST READ