சில தினங்களுக்கு முன்பாக த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மன்சூர் அலிகான் அநாகரிகமாக திரிஷா குறித்து பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன் பின் பேசு பொருளாக ஆரிய திரிஷா – மன்சூர் அலிகான் விவகாரத்தில் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவினை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின்படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது கூட திரிஷா, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். எனவே இந்த விவகாரம் முடிந்து விட்டது என்று பெருமூச்சு விடும் நொடிகளுக்குள் மன்சூர் அலிகான் வீடியோவில் நான் என்ன பேசினேன் என்பதை முழுமையாக பார்க்காமல், பொதுமக்களின் அமைதியை கெடுத்ததால் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி மூவரின் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்ட நிலையில் மூவரும் தலா 1 கோடி வீதம் 3 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்….. திரிஷா, குஷ்பூ ,சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர்!
-