Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டில் நாளை 3 படங்கள் திரைக்கு வருகிறது!

கோலிவுட்டில் நாளை 3 படங்கள் திரைக்கு வருகிறது!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதனின் டிராகன், தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், சமுத்திரக்கனியின் ராமம் ராவகம் ஆகிய மூன்று திரைப்படங்கள் நாளை வெளியாகிறது! கோலிவுட்டில் நாளை 3 படங்கள் திரைக்கு வருகிறது! கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே  வெளியான பல படங்களில் மதகஜராஜா மற்றும் குடும்பஸ்தன் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்று, விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த வாரம்  இரண்டு தமிழ் படங்களும் ஒரு டப்பிங் படமும் திரைக்கு வருகிறது.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இதற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அப்படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராகவும் மாறினார். தற்பொழுது அவருடைய நடிப்பில் இரண்டாவது திரைப்படமாக இது உருவாகி உள்ளது. நாளை திரைக்கு வர உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வர இருந்த இப்படம் விடாமுயற்சி படத்துக்காக பிப்ரவரி 21ஆம் தேதி புதிய  வெளியீட்டு தேதியை  அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அதனைத் தொடர்ந்து தனது 50 வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்பொழுது தனது சகோதரி மகன் பவிஷ்-ஐ கதாநாயகனாக வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.  மேலும் இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படமும் நாளை திரைக்கு வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது நான்காவதாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தனராஜ்  இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் தெலுங்கு தமிழில் உருவாகியுள்ள ராமம் ராகவம் படமும் நாளை வெளியாகிறது.

‘தக் லைஃப்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!

MUST READ