- Advertisement -
தமிழ் சினிமாவின் தளபதியாக கொண்டாடப்படுபவர் விஜய். கோலிவுட் திரையுலகம் வளர வளர தன்னையும், தன் நடிப்பையும் வளர்த்திக் கொண்டவர் நடிகர் விஜய். இளைய தளபதியாக சினிமாவில் நுழைந்த விஜய்யை, ரசிகர்கள் இன்று தளபதியாக தலையின் மேல் வைத்து கொண்டாடுகிறார்கள். விஜய்யின் படங்கள் வெளியாகும் அனைத்து நடா்களிலும் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாகும். கடந்த 1992-ம் ஆண்டு தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானர் நடிகர் விஜய். அதன்பிறகு தந்தை இயக்கத்தில் சில படங்களில் நடித்த விஜய்க்கு விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. விஜய்யை முன்னணி நடிகராகவும் உயர்த்தியது.
மென்மையான காதல் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு, ரமணா இயக்கத்தில் வெளியான திருமலை திரைப்படம் ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுத் தந்தது. அதன்பிறகு விஜய்யின் சினிமா உலகில் அனைத்தும் ஏறுமுகம் தான். இளைஞர்கள் மட்டுமன்றி குழந்தைகள், குடும்ப பெண்கள் என அனைத்து தரப்பினரும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக மாறினர். நாளைய தீர்ப்பில் தொடங்கிய அன்பு லியோ படம் வரை தொடர்கிறது. மேலும், விஜய் ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். அடுத்தகட்டமாக அரசியலில் நுழையும் திட்டத்தில் விஜய் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அண்மையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றித”் வழங்கி கௌரவப்படுத்தினார்.
Love you @actorvijay Anna ❤️ pic.twitter.com/Zst6AJlFLi
— Syed (@syedfromdubai) December 3, 2023