Homeசெய்திகள்சினிமாநிவேதா தாமஸ் நடிக்கும் 35 சின்ன விஷயம் இல்ல... வெளியானது டீசர்..

நிவேதா தாமஸ் நடிக்கும் 35 சின்ன விஷயம் இல்ல… வெளியானது டீசர்..

-

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் 90-களில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடரான, மை டியர் பூதம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தார் நிவேதா தாமஸ். இதைத் தொடர்ந்து கோலிவுட்டில் பல திரைப்படங்களில் அவர் நடித்திருப்பார்
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இப்படத்தில் நிவேதாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அடுத்து, நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காத நிவேதா, தெலுங்கில் பல படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். கோலிவுட்டில் விஜய்யுடன் குருவி, ஜில்லை ஆகிய படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினிக்கு மகளாக தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நிவேதா தாமஸ் நடித்திருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு டீசருடன் வெளியாகி உள்ளது. 35 சின்ன விஷயம் இல்ல என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவேதா நாயகியாக நடிக்க, விஷ்வதேவ், பிரியதர்ஷி புலிகொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நந்த கிஷோர் இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வெளியிடுகிறார். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வௌியாகிறது.

MUST READ