கடந்த சில தினங்களுக்கு முன்னர் சைஃப் அலிகான் வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்து சைஃப் அலிகானை 6 இடங்களில் குத்தி விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களையும் திரைப் பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சைஃப் அலிகானை தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்னர் சைஃப் அலிகானை தாக்கிய வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சைஃப் அலிகான் வீட்டு பணிப்பெண் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அந்த மர்ம நபரின் முதல் டார்கெட் சைஃப் அலிகானின் 4 வயது சிறுவன் தான். அந்தச் சிறுவனை பணயமாக வைத்து மர்ம நபர் 1 கோடி ரூபாய் கேட்டு பணிப்பெண்ணை மிரட்டி இருக்கிறார்.
அப்போது அந்த பணிப்பெண்ணையும் கத்தியால் தாக்கியுள்ளார் அந்த நபர். இதனால் பணிப்பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த சைஃப் அலிகான் அந்தக் கொள்ளையனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது சைஃப் அலிக்கானையும் அந்த நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார் என்று சொல்லப்படுகிறது. சைஃப் அலிகானின் பணிப்பெண்ணின் இந்த வாக்குமூலம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் ஏற்கனவே சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் சம்பவம் நடந்த நேரத்தில் தனது இரண்டு மகன்களுடன் வெளியில் சென்று விட்டார் என்று தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.