Homeசெய்திகள்சினிமாஇன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

-

இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

கொட்டுக்காளிஇன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

கொட்டுக்காளி திரைப்படமானது நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தில் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகிறது.

வாழைஇன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவருடைய அடுத்த படைப்புதான் வாழை. இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகிறது.

போகுமிடம் வெகு தூரமில்லைஇன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

விமல், கருணாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் போகுமிடம் வெகு தூரமில்லை. இந்த படத்தை மைக்கேல் கே ராஜா இயக்கியிருக்கிறார். இதில் அமரர் ஊர்தி ஓட்டுனராக நடிகர் விமல் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகிறது. அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் டிக்கெட்டு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அதர்ம கதைகள், நாற்கரப்போர், சாலா போன்ற படங்களும் வெளியாகிறது.

MUST READ