தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரை பயணத்தில் 6 வருடங்களை நிறைவு செய்துள்ளார்!
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மிகப்பெரிய திரைப்பட்டாளமே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்படுகிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குநரான அறிமுகமான முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. சந்தீக் கிஷன், ஶ்ரீ, ரெஜினா, சார்லி, முனீஸ்காந்த் என பலர் நடிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
முதல் படத்திலேயே வெற்றி தடத்தை பதித்த இயக்குநர் லோகேஷ், அதைத்தொடர்ந்து கார்த்தியின் ‘கைதி’, விஜய்யின் ‘மாஸ்டர்’, கமலின் ‘விக்ரம்‘ என அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் பட்டியலில் உள்ளார்.
விக்ரம் படம் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென தனி யுனிவர்ஸ்-ஐ உருவாக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தியள்ளார்.
தற்போது விஜய்யுடன் 2-வது முறையாக கூட்டணி வைத்து, லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.
We Thank each & everyone who took #Maanagaram to great heights! 🙏#6YearsOfMaanagaram @sundeepkishan #shri @ReginaCassandra #Charlie #Munishkanth @selvakumarskdop @javeddriaz @philoedit @anbariv @Dir_Lokesh #மாநகரம் pic.twitter.com/FZ1N2SJwxj
— Potential Studios LLP (@Potential_st) March 10, 2023