Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டில் 6 திரைப்படங்கள் வெளியீடு!

தமிழ் புத்தாண்டில் 6 திரைப்படங்கள் வெளியீடு!

-

- Advertisement -

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை ஒரே நாளில், ஒரு டப்பிங் படம் உள்பட 6 தமிழ் படங்கள் வெளியாகிறது!

ருத்ரன், திருவின் குரல், சொப்பன சுந்தரி, சாகுந்தலம், ரிப்பப்பரி, இரண்டில் ஒன்று பார்த்து விடு ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘ருத்ரன்’ திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இயக்குநர் திரேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக சரத்குமார் நடித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு அன்று 6 திரைப்படங்கள் வெளியீடு!

இப்படத்திற்க்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த பட வெளியீட்டுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அந்த உத்தரவை ரத்து செய்த நிலையில் திட்டமிட்ட படி நாளை வெளியாகிறது.

லைகா தயாரிப்பில் பாரதிராஜா-அருள்நிதி இணைந்து நடிக்கும் திருவின் குரல் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். ஹரிஷ் பிரபு இயக்கும் இந்த படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

தமிழ் புத்தாண்டு அன்று 6 திரைப்படங்கள் வெளியீடு!

லாக்கப் திரைப்பட இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், தீபா, ரெடின் கிங்க்ஸ்லி நடிப்பில் உருவான ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

தமிழ் புத்தாண்டு அன்று 6 திரைப்படங்கள் வெளியீடு!

இது தவிர மாஸ்டர் மகேந்திரனின் ரிப்பப்பரி, இரண்டில் ஒன்று பார்த்து விடு ஆகிய படங்களும் திரையரங்குகளில் வெளியாகின்றன.

சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் குணசேகர் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெளியீட்டு தேதியில் இருந்து ஏற்கனவே 2 முறை தள்ளிப்போன சாகுந்தலம் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் நாளை திரைக்கு வர இருக்கிறது. மேலும் ‘சாகுந்தலம்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு அன்று 6 திரைப்படங்கள் வெளியீடு!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 திரைப்படம் கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் முறையாக சூரி கதாநாயகனாக அறிமுகமான இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தெலுங்கில் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகிறது.

MUST READ