Homeசெய்திகள்சினிமா70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு... 4 விருதுகளை வென்ற 'பொன்னியின் செல்வன்-1'

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு… 4 விருதுகளை வென்ற ‘பொன்னியின் செல்வன்-1’

-

70-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் தமிழில் சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை வென்று அசத்தியது

புது டெல்லியில் இன்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில் 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மொழிகளை சேர்ந்த 309 படங்கள் போட்டி யிட்டன. இதில் எழுத்தாளர் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் தமிழில் சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை வென்று அசத்தியது.


அதன்படி தமிழில் சிறந்த படமாக ‘பொன்னியின் செல்வன்-1’ தேர்வு செய்யப்பட்டது. மேலும், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார். இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினை ரவிவர்மனும், சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் வென்றனர்.

இதேபோல் சிறந்த கன்னட மொழி திரைப்படமாக ‘கேஜிஎப் 2,சிறந்த தெலுங்கு திரைப்படமாக ‘கார்த்திகேயா 2’, சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெல்லக்காவும், சிறந்த இந்தி திரைப்படமாக குல்மோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டது. ‘KGF 2′ படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அன்பறிவ் சகோதரர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது ‘சவுதி வெல்லக்கா’படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு அறிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக அர்ஜித் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டது.

MUST READ