Homeசெய்திகள்சினிமாதலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்....... அட்டகாசமான அப்டேட்!

தலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்……. அட்டகாசமான அப்டேட்!

-

தலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்....... அட்டகாசமான அப்டேட்!நடிகர் ரஜினி தற்போது ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. தலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்....... அட்டகாசமான அப்டேட்!விக்ரம், லியோ, மாஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி தலைவர் 171 படம் சம்பந்தமான அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக கூட தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ரஜினிக்கு வில்லனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பல செய்திகள் பரவி வந்தன. தலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்....... அட்டகாசமான அப்டேட்!இந்நிலையில் தலைவர் 171 இல் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பது சிவகார்த்திகேயன் இல்லையாம். தலைவர் 171 படத்தில் வில்லனாக களம் இறங்க இருப்பது நடிகர் ராகவா லாரன்ஸ் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது லாரன்ஸின் கனவு. எனவே அது தலைவர் 171 படத்தின் மூலமாக நடக்கப் போகிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தலைவர் 171இல் வில்லனாக களமிறங்கும் ரஜினியின் தீவிர ரசிகன்....... அட்டகாசமான அப்டேட்!

மேலும் தலைவர் 171 படத்தில் ரஜினியை டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலமாக தளபதி பட லுக்கில் காட்ட இருக்கிறார் லோகேஷ். அதேசமயம் ஆக்சன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ