எம்புரான் படத்தில் நடித்துள்ள கேமியோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
எனவே அதைத்தொடர்ந்து பிரித்விராஜ், லூசிபர் 2 – எம்புரான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்திருந்ததை போல் இரண்டாம் பாகத்திலும் மோகன் லாலுடன் இணைந்து மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ், பிரித்விராஜ், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்க சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் பான் இந்திய அளவில் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 days to go! #L2E #EMPURAAN In theatres worldwide from 27/03/25.
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal @PrithviOfficial #MuraliGopy @antonypbvr @aashirvadcine @GokulamGopalan @GokulamMovies #VCPraveen #BaijuGopalan #Krishnamoorthy @DreamBig_film_s… pic.twitter.com/tigfwShMJE
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 19, 2025
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் அடுத்தது இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பெரிய நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அந்த நடிகர் சஞ்சய் தத் என்று பல தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இருப்பினும் எம்ரான் படத்தில் யார் கேமியோ ரோலில் நடித்துள்ளார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.