உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது இந்தியன்-2. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் மீது நடிகர் விஷால் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விஷாலின்”வீரமே வாகை சூடும்” படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையால் லைகா நிறுவனம் விஷாலின் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. அதாவது விஷால் பிரபல பைனான்சியர் அன்புச் செழியனிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த விஷாலுக்கு லைகா நிறுவனம் உதவியது. ஆனால் அப்பணத்தை விஷால் லைகா நிறுவனத்திற்கு திருப்பி அளிக்காததால் அவருடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் வெளிவரும் படங்களை ரிலீஸ் செய்யத் தடை விதிக்கும்படி லைகா, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடர்ந்தது. இதன் தீர்ப்பாக விஷாலுக்கு ரூபாய் 15 கோடி நீதிமன்றத்துக்கு பிணையாகச் செலுத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, தற்போது நடிகர் விஷால் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் 500 கோடி பட்ஜெட்டில் பெரிய தொகையை இந்தியன் 2 படத்திற்காக செலவிட்டுள்ளது. ஒருவேளை இப்படம் ஓடவில்லை எனில் வெளிநாட்டு நிறுவனமான லைகா ஓடிவிடும். தனக்கு வர வேண்டிய பணம் வராது. எனவே லைகாவின் ஐந்து கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியன் 2 படம் ஏகப்பட்ட பிரச்சனைகளைத் தாண்டி தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இவ்வளவு பொருட்செலவில் உருவான பிரம்மாண்டத் திரைப்படம் ஓடாது என்பது போல விஷால் இந்த பிரச்சினையை முன்னெடுத்துள்ளார். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்தியன் 2 விற்கு, விஷால் நெகடிவ் ரிவியூ கொடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
- Advertisement -