நடிகர் விஜய் தளபதி என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி கேரளாவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு அடையாளம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் திருவனந்தபுரம் சென்றிருந்தபோது விஜய்யை நேரில் பார்க்க கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர் கேரள மக்கள். மேலும் குட்டீஸ்களும் கூட விஜய்யை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பெண் குழந்தை ஒன்று காரில் பயணம் செய்யும்போது விஜயின் ஷாஜகான் படத்தில் இடம் பெற்ற “சரக்கு வச்சிருக்கேன்” எனும் பாடலை தனது மழலை குரலில் மிக அழகாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
Cute..😄❣️ #ThalapthyVijay‘s Kutty fan vibing to his old song..🤙pic.twitter.com/lhkaM6SNAX
— Laxmi Kanth (@iammoviebuff007) June 19, 2024
நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை இயக்க இருப்பதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாககவில்லை. இதற்கிடையில் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.