பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மிஸ்கினுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஸ்கின். அந்த வகையில் இவர் ட்ரெயின், பிசாசு 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இவர் தற்போது பல படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிஸ்கின். மேலும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக பணியாற்றி வரும் மிஸ்கின் பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் பேசி கடும் கண்டனத்திற்கு ஆளாவார். அதேபோல் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பாட்டல் ராதா படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய மிஸ்கின் மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார். இது தொடர்பாக பிரபல நடிகர் அருள்தாஸ், “இயக்குனர் மிஸ்கின், ஒரு பட நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசி இருந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை பல மேடைகளில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சினிமா மேடையில் நாகரீகம் இல்லாமல் பேசுவதா? மிஸ்கின் நாவை அடக்கி பேச வேண்டும். மற்றவர்களை ஒருமையில் பேசும் அவர் என்ன பெரிய அப்பாடக்கரா? பல புத்தகங்களை படிப்பதாக கூறும் அவர் ஒரு போலியான அறிவாளி” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.