பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் சுப்பிரமணி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இன்னும் பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கும் தயாரானார். அதன்படி அந்த கதையை சத்யராஜ், விஜயகாந்த், விஜய் போன்ற பல நடிகர்களிடம் சொல்ல அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லையாம். எனவேதான் சினிமாவில் நடிகராக பெயர் எடுக்க ஆசைப்பட்டார் சூப்பர் குட் சுப்ரமணி. அதன்படி இவர் ஜெய் பீம், சூரரைப் போற்று, சார்பட்டா பரம்பரை, பரியேறும் பெருமாள், மகாராஜா ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சுப்ரமணி. இந்நிலையில் தான் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதாவது இவருக்கு புற்றுநோய் பாதிப்பில் 4வது கட்டம் என மருத்துவர்கள் சுப்பிரமணியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இவருடைய மேற்சிகிச்சைக்காக நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அவருக்கு உதவுமாறு திரைப் பிரபலங்களுக்கும், தமிழக அரசுக்கும் சுப்ரமணியின் மனைவி ராதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.