Homeசெய்திகள்சினிமா'சர்தார் 2' படத்தில் இணைந்த பிரபல நடிகர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘சர்தார் 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

சர்தார் 2 திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'சர்தார் 2' படத்தில் இணைந்த பிரபல நடிகர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பி எஸ் மித்ரன் இயக்கத்திலும் கார்த்தியின் நடிப்பிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். ஸ்பை திரில்லர் ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 'சர்தார் 2' படத்தில் இணைந்த பிரபல நடிகர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!எனவே அதைத் தொடர்ந்து சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாகி வருகிறார் பிஎஸ் மித்ரன். மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய படங்களைத் தொடர்ந்து சர்தார் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார் கார்த்தி. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 15) இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.'சர்தார் 2' படத்தில் இணைந்த பிரபல நடிகர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்தார் 2 படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ