ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது.
அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட்டணியில் லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் நடிகர் ரஜினிகாந்த் கேமியா ரோலில் நடித்திருந்தார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படியாவது தான் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் சித்தார்த்திடம் தனது அடுத்த படத்தின் ஒரு வரி கதையை கூறியுள்ளதாகவும் அதற்கு சித்தார்த் ஓகே சொல்லி விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் சித்தார்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அதன்படி முழு ஸ்கிரிப்டையும் கொடுக்கும்படி கேட்டுள்ளாராம். எனவே முழு ஸ்கிரிப்ட்டையும் சித்தார்த் படித்து பார்த்துவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.