பிரபல நடிகர் கருணாகரனின் தந்தை காளிதாஸ் மரணம்.
நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, சந்தானம், சிவகார்த்திகேயன், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருபவர். அந்த வகையில் இவர் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வரும் கருணாகரனின் தந்தை காளிதாஸ் கேபினட் செயலாக சிறப்பு பிரிவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். 77 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் இன்று (செப்டம்பர் 14) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் கருணாகரனின் தந்தை காளிதாஸ் மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.