ரஜினியின் கூலி படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தை 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கூலி திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா, ‘காவாலா‘ பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்த நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.
அதேபோல் ரஜினியின் கூலி படத்தில் பிரபல நடிகை ஒருவர் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி அந்த நடிகை வேறு யாருமில்லை. பூஜா ஹெக்டே தான் கூலி திரைப்படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளாராம். இந்த பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் எனவும் ‘காவாலா’ பாடலை போல் மிகப்பெரிய அளவில் வைரலாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.