பிரபல நடிகை ஜோதிர்மயி தாயார் மரணம்.
நடிகை ஜோதிர்மயி தொடக்கத்தில் மாடலிங் செய்து வந்த இவர் மலையாள சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின் மலையாளத் திரையுலகில் அடி எடுத்து வைத்த ஜோதிர்மயி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் இணைந்து சபரி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பெரியார், வெடிகுண்ட முருகேசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் ஜோதிர்மயி. அதே சமயம் இவர் நிஷாந்த் குமார் என்பவரை 2004 இல் திருமணம் செய்து கொண்டு பின்னர் ஒரு சில காரணங்களால் இவர்களின் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதன் பின் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய தாயார் பி.சி. சரஸ்வதி காலமானார். கடந்த சில தினங்களாகவே பி.சி சரஸ்வதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 75 வயது நிரம்பியவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். ஜோதிர்மயி தாயார் பி.சி. சரஸ்வதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எர்ணாகுளத்தில் வைக்கப்பட்டதை தொடர்ந்து ரவிபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஜோதிர்மயிக்கு தங்களின் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.