பிரபல நடிகை ஒருவர் தனக்கு திரில்லர் படம் இயக்கும் ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர். அந்த வகையில் ஆரம்பத்தில் இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை தனது திரைப்படத்தை தொடங்கினார். அதே சமயம் தமிழில் இவர் அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்ட இவர் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அடுத்தது சமீபத்தில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன். இவ்வாறு திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில் பேசிய மஞ்சிமா மோகன், தனக்குத் திரில்லர் படம் இயக்க ஆசை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னால் திரைக்கதை எழுத முடியாவிட்டாலும் எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார். எனவே வருங்காலத்தில் மஞ்சிமா மோகனுக்கு இயக்குனராகம் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.