பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் கல்கி 2898AD என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. மேலும் பிரபாஸ், தி ராஜாசாப், கண்ணப்பா, ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் பிரபாஸ், ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் தற்போது இதன் கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.