Homeசெய்திகள்சினிமாயாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை..... யார் தெரியுமா?

யாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை….. யார் தெரியுமா?

-

நடிகர் யாஷ், கே ஜி எஃப் 1, 2 ஆகிய இரு படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். யாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை..... யார் தெரியுமா?கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் மூலம் 1000 கோடி வசூலை கட்டி தூக்கி பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்தார் யாஷ். அதைத்தொடர்ந்து இவர் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டாக்ஸிக் எனும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. யாஷின் 19 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படமானது போதைப்பொருள் சம்பந்தமான கதைக்களத்தில் கே ஜி எஃப் படத்தை போல் ஆக்சன் நிறைந்த படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.யாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை..... யார் தெரியுமா? அதாவது இந்த படத்தில் முதலில் கரீனா கபூர், யாஷுக்கு அக்காவாக நடித்த போகிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் 20 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது. அதன் பின்னர் சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை, ரஜினியின் காலா போன்ற படங்களில் நடித்திருந்த ஹூமா குரேஷி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் பரவின. இருப்பினும் அக்கா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் யாஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க போகிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. யாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை..... யார் தெரியுமா?நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சலார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ