Homeசெய்திகள்சினிமாமீண்டும் விஜயுடன் இணையும் பிரபல குணச்சித்திர நடிகர்.... 'தளபதி 69' பட அப்டேட்!

மீண்டும் விஜயுடன் இணையும் பிரபல குணச்சித்திர நடிகர்…. ‘தளபதி 69’ பட அப்டேட்!

-

தளபதி 69 படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் ஒருவர் மீண்டும் விஜயுடன் இணைய போவதாக தகவல் கிடைத்துள்ளது.மீண்டும் விஜயுடன் இணையும் பிரபல குணச்சித்திர நடிகர்.... 'தளபதி 69' பட அப்டேட்!நடிகர் விஜய் கடைசியாக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. அனிருத் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மீண்டும் விஜயுடன் இணையும் பிரபல குணச்சித்திர நடிகர்.... 'தளபதி 69' பட அப்டேட்!அதாவது நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளதால் தளபதி 69 திரைப்படம் தான் விஜயின் கடைசி படம் என்று அவரே அறிவித்திருந்தார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேசமயம் இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களத்தில் கமர்சியல் படமாக உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் விஜயுடன் இணைந்து மமிதா பைஜூ, சமந்தா,மோகன்லால், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.மீண்டும் விஜயுடன் இணையும் பிரபல குணச்சித்திர நடிகர்.... 'தளபதி 69' பட அப்டேட்! இந்நிலையில் இந்த படத்தில் புதுவரவாக பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் பிரகாஷ்ராஜ் தான். இவர் ஏற்கனவே விஜயுடன் இணைந்து கில்லி, வாரிசு போன்ற பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.

MUST READ