Homeசெய்திகள்சினிமாதிரையுலகில் அடுத்த விவாகரத்து செய்தி..... பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு!

திரையுலகில் அடுத்த விவாகரத்து செய்தி….. பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு!

-

பிரபல இயக்குனர் தன்னுடைய விவாகரத்தினை அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத், பாவனா ,சந்தியா ஆகியோரின் நடிப்பில் வெளியான கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். திரையுலகில் அடுத்த விவாகரத்து செய்தி..... பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு!அதைத் தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டார். கடைசியாக இவர் கோழிப்பண்ணை செல்லதுரை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் இடி முழக்கம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், “நானும் என் மனைவி ஜி எஸ் தர்ஷனாவும் எங்களுடைய 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எந்த விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.

என் மனைவி தர்ஷனாவும் அறிவார். இந்த பிரிவிற்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு அதன் உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ