நடிகர் அஜித்துக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இந்த படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதாகவும் ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே ரசிகர்களும் அஜித் – ஆதிக்கின் அடுத்த சம்பவத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் தனுஷும் இயக்கப் போவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்தது போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவும், மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதனும் அஜித்தின் லைன் அப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க, தற்போது பிரபல இயக்குனர் வெங்கி அட்லுரியும் இந்த பட்டியலில் இணைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றவர் வெங்கி அட்லூரி. இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்கப் போவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இவர் அஜித்திடம் கதை சொல்லி, அஜித்தின் லைன் அப்பில் இணைந்திருப்பதால் சூர்யா 46 படத்திலிருந்து வெங்கி அட்லூரி விலகி விட்டாரா? என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் வெங்கி அட்லூரி, சூர்யா 46 படத்தை குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்துவிட்டு அதன் பிறகு தான் அஜித் படத்தை இயக்குவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.