பிரபல இயக்குனர் ஒருவர், தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து விமர்சனம் கொடுத்துள்ளார்.
தனுஷின் இயக்கத்தில் தற்போது இட்லி கடை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (பிப்ரவரி 21) திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
Watched #NEEK The movie had full of energetic moments and so refreshing.
The portrayal of love and friendship was so raw and pure 💕@dhanushkraja sir sonna madiri ‘Jolly ah vanga jolly ah ponga’😍
Thiruchitrambalam Vibes ❤️Congrats to the entire team 💐@theSreyas @gvprakash
— Tamizharasan Pachamuthu (@tamizh018) February 20, 2025
அதன்படி அவர் அந்த பதிவில், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பார்த்தேன். படம் முழுக்க எனர்ஜியான தருணங்களாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் மற்றும் நட்பின் சித்தரிப்பு மிகவும் தூய்மையாக காட்டப்பட்டுள்ளது. தனுஷ் சார் சொன்ன மாதிரி ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’… திருச்சிற்றம்பலம் வைப்ஸ் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.