Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!

-

- Advertisement -

பிரபல தொகுப்பாளினி ஒருவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் 1970 கால கட்டங்களில் இருந்து தனது திரை பயணத்தை தொடங்கியவர். அதன்படி அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ரஜினி. அதைத்தொடர்ந்து ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரனை போல் அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினி. இத்தகைய பெருமைகளை உடைய ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல தொகுப்பாளினி ஒருவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!

அதாவது கடந்த 1995இல் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் முத்து திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். ஆனால் முதலில் படக்குழுவினர், மீனாவின் கதாபாத்திரத்தில் நடிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி பெப்சி உமாவை அணுகினார்களாம். பெப்சி உமா ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்த நிலையில் ரஜினியும் அவரை அழைத்தாராம். ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!ஆனால் அதற்கும் பெப்சி உமா மறுத்துவிட்டாராம். ஏனென்றால் பெப்சி உமாவிற்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்பதால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதற்கும் நோ சொல்லிவிட்டாராம் பெப்சி உமா.

MUST READ